காதல் மோகம்.. சாலை முழுக்க அதே வார்த்தை.. மிரண்டுபோன கிராமவாசிகள்.. இணையத்தில் வைரலாகும் இளைஞரின் செயல்..

காதல் மோகம்.. சாலை முழுக்க அதே வார்த்தை.. மிரண்டுபோன கிராமவாசிகள்.. இணையத்தில் வைரலாகும் இளைஞரின் செயல்..


Man paints 2.5 km road with I Love You

அடையாளம் தெரியாத நபர்கள் முக்கிய சாலை ஒன்றில் ஐ லவ் யூ என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாங்கள் காதலிக்கும் பெண்களை கவர்வதற்காக இளைஞர்கள் சில வித்தியாசமாக முயற்ச்சி செய்வது வழக்கம். சில நேரங்களில் அது வேடிக்கையாக இருக்கும், பல நேரங்களில் அதுவே விபரீதமாக மாறி சிக்கல்கள் எழுவதும் உண்டு. அந்த வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள கிராமம் ஒன்றின் சாலையில் 2.5 கி.மீ தூரத்திற்கு இடைவெளி விட்டு விட்டு  ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்.

இது மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த யாரோ ஒரு இளைஞரின் வேலையாக இருக்கலாம் என்றும், தான் காதலிக்கும் பெண்ணை கவர்வதற்காக அவர் இப்படி செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதை அவரது காதலி படித்தாரா? இல்லையா? என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.