இந்தியா

அட கடவுளே.. இப்போ பெண்களும் இப்படி இறங்கிட்டாங்களா..! காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு காதலி கொடுத்த பகீர் தண்டனை..

Summary:

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம் பெண் ஆசிட் வீசிய சம்பவம பெரும் பரபர

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம் பெண் ஆசிட் வீசிய சம்பவம பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சோனம்பாண்டே (25) என்ற இளம் பெண் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்துவருகிறார். சோனம்பாண்டே பணிபுரிந்துவரும் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஆய்வகம் போன்றவை தேவேந்திரகுமார் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்துள்ளனர். இந்நிலையில் தேவேந்திரகுமாருக்கு சமீபத்தில் வேறொரு பெண்ணுடன் திருமணம் பேசிமுடிக்கப்பட்டு, திருமண வேலைகள் நடந்துள்ளது. இந்த தகவல் சோனத்திற்கு தெரியவர, அவர் இதுகுறித்து தேவேந்திரனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரும் உன்னை திருமணம் செய்துகொள்ளமுடியாது என சோனத்திடம் கூறியுள்ளார்.

இதனால் மேலும் கோபமடைந்த சோனம், சம்பவத்தன்று தேவேந்திரகுமாரை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார், தேவேந்திரகுமாரும் சோனம் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு தான் மறைத்துவைத்திருந்த ஆசிட்டை எடுத்து சோனம் தேவேந்திரகுமாரின் முகத்தில் வீசியுள்ளார்.

இதில் தேவேந்திர குமார் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்தநிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதனை அடுத்து சோனம் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்துவருகின்றனர். காதலன் மீது இளம் பெண் ஆசிட் வீசிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement