அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!
அதிரடி தீர்ப்பு... 8 வயது சிறுவன் கற்பழித்து கொலை.!! குற்றவாளிக்கு மரண தண்டனை.!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கொடூர செயலுக்கு மரண தண்டனை வழங்கி காஸிபூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
உத்திரபிரதேச மாநிலம் காஸிபூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் நாத். கடந்த 2024ம் வருடம் இவர் தனது வீட்டின் அருகே குடியிருந்த 8 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். பிறகு சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவனது உடலை தனது வீட்டில் பெட்டியில் மறைத்து வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸ் சஞ்சய் நாத்தை கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த உடற்கூறாய்வில் சிறுவன் இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தின் வழக்கு விசாரணை காஸிபூர் போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தக் கொடூர வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!
இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராம் அவதார் பிரசாத் சாட்சிகள் மற்றும் தடயங்களின் படி குற்றவாளியான சஞ்சய் நாத்துக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: 9 வயது சிறுமி பாலாத்காரம்... 40 வயது நபருக்கு ஆயுள் சிறை தண்டனை.!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!