சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
9 வயது சிறுமி பாலாத்காரம்... 40 வயது நபருக்கு ஆயுள் சிறை தண்டனை.!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!
கேரள மாநிலம் காசர்கோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள ஹோஸ்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். 40 வயதான இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். சிறுமியின் தாத்தா பால் கறக்க சென்ற போது வீட்டிற்குள் புகுந்த அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சலீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை சிறையிலடைத்தது.

கடந்த வருடம் மே மாதம் நடந்த இந்த சம்பவத்தில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி சலீமுக்கு சாகும் வரை சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் தீர்ப்பை பலரும் பாராட்டி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! 27 வயது நபர் கைது.!!
சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற தீர்ப்புகள் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலிப்பதாக நாடகம்... 15 வயது சிறுமி கற்பழிப்பு.!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.!!