குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி டெலிவரி மேன்.! ஊழியரை அடையாளம் கட்டினால் ரொக்கப்பரிசு அறிவிப்பு.!

குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி டெலிவரி மேன்.! ஊழியரை அடையாளம் கட்டினால் ரொக்கப்பரிசு அறிவிப்பு.!


man food delivery in horse

மும்பை கன மழைக்கு இடையே உணவு டெலிவரி செய்வதற்காக குதிரையில் சென்று உணவு, டெலிவரி செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பை மழைக்கு மத்தியில் உணவு டெலிவரி செய்வதற்காக குதிரையில் சவாரி செய்த டெலிவரி பார்ட்னரை அடையாளம் காண உதவுமாறு நெட்டிசன்களை ஸ்விக்கி கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது வைரலாகும் அந்த வீடியோவில் டெலிவரி ஏஜென்ட்டை நிறுவனத்தால் அடையாளம் காண முடியவில்லை. காருக்குள் இருந்து படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், ஸ்விக்கி உணவு வழங்கும் பையுடன் ஒருவர் மும்பை சாலையில் குதிரையில் சவாரி செய்வதைக் காட்டுகிறது.  

swiggi

 வீடியோ வைரலானதை அடுத்து, ஸ்விக்கி, குதிரையில் செல்லும் அந்த டெலிவரி மேனை பற்றிய தகவலை கொடுக்குமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நெட்டிசன்கள் மற்றும் உணவுப் பிரியர்கள் கவனத்திற்கு, அறியப்படாத ஒரு நபர், ஒரு  குதிரையில் அமர்ந்து, எங்கள் டெலிவரி பேக்கை எடுத்துச் செல்லும் வீடியோ, எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. வீடியோவில் உள்ள நபரை அடையாளம் கண்டு தகவல் தெரிவிக்கும் முதல் நபருக்கு ஸ்விக்கி மனியில் ரூ. 5,000 வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.