இப்படியொரு வேதனை யாருக்கும் வரக்கூடாது.! ஒதுக்கிய கிராமத்தினர்! மகள், மனைவி கண்முன்னே துடிதுடித்து நேர்ந்த துயரம்.!!

இப்படியொரு வேதனை யாருக்கும் வரக்கூடாது.! ஒதுக்கிய கிராமத்தினர்! மகள், மனைவி கண்முன்னே துடிதுடித்து நேர்ந்த துயரம்.!!



man-dead-front-of-wife-and-daughter-by-covid

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கோயனபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் 44 வயது நிறைந்த ஆசிரிநாயுடு. இவர் விஜயவாடாவில் தனது குடும்பத்தினருடன் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில்  தொற்று இருப்பது உறுதியானது.மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 அதனை தொடர்ந்து ஆசிரிநாயுடு  குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கிராமத்தினர் அவர்களை கிராமத்திலிருந்து வெகுதூரத்திலுள்ள குடிசை ஒன்றில் தங்க கூறியுள்ளனர். இந்த நிலையில் அண்மையில் திடீரென ஆசிரிநாயுடு உடல்நிலை மோசமாகி அவர் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லை. மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என கிராமத்தினர் கூறியுள்ளனர்.

Covid

இந்த நிலையில் ஆசிரிநாயுடுவிற்கு மூச்சுத்திணறல் அதிகரித்து அவர் துடிதுடித்துள்ளார். இதனைக் கண்டு அவரது மகள் மற்றும் மனைவி இருவரும் கதறி தவித்துள்ளனர். மேலும் அப்பொழுது மகள் தண்ணீர் எடுத்துக்கொண்டு  அப்பா அருகே சென்றுள்ளார்.

 ஆனால் அவரை தன் அருகில் வர வேண்டாம் என ஆசிரிநாயுடு தடுத்துள்ளார். ஆனாலும் அவரது மகள் அருகே சென்று தந்தைக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனால் சில நிமிடங்களிலேயே ஆசிரிநாயுடு உயிர் பிரிந்தது. இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.