
ஆசை தீர்ந்ததும் கழட்டிவிட்ட காதலி!! வேதனையில் காதலன் எடுத்த விபரீத முடிவு..
காதலி கழட்டிவிட்டு வேதனையில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொப்பிசெட்டிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராவ். இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில் சங்கர் ராவுக்கு அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துவந்தநிலையில், சங்கர் ராவிடம் இருந்து ஏராளாமான பணம், நகை ஆகியவற்றை அந்த பெண் வாங்கியுள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக சங்கர் ராவுடன் அந்த பெண் பேசுவதை தவிர்த்துவந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சங்கர், அந்த பெண்ணை தொடர்புகொண்டு தன்னிடம் பேசுமாறு கூறியுள்ளார்.
இறுதியாக, உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று அந்த பெண் சங்கர்ராவிடம் கூறியதாக தெரியவந்துள்ளது. இதனால் மனவேதனையடைந்த சங்கர், தனது நண்பர்களை இணைத்து வாட்சப் குழு ஒன்றை உருவாக்கி, அதில் தான் ஏமாற்றப்பட்ட விஷயங்களை கூறிவிட்டு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Advertisement
Advertisement