நெஞ்சே பதறுதே... ஒரு தலை காதல் கொடூரம்.!! 17 வயது சிறுமி எரித்து கொலை.!! வாலிபர் வெறி செயல்.!!



man-burnt-a-school-girl-to-death-in-love-affair-police

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தலை காதல் விவகாரத்தில் 16 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

3 வருடமாக ஒருதலை காதல்

ஆந்திர மாநிலம் களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா(21). இவர் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாக காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இவரது காதலை அந்த பெண் நிராகரித்த பின்பும் தொடர்ச்சியாக அந்த மாணவியை பின் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார் ராகவேந்திரா.

India

பாட்டி வீட்டில் குடியேறிய மாணவி

ராகவேந்திரா தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மாணவியின் பெற்றோர் நந்திகோட்கூரில் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கும் சென்ற ராகவேந்திரா மாணவிக்கு தொடர் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் இளைஞரின் தொல்லையில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் மாணவியின் குடும்பம் தவித்திருக்கிறது.

இதையும் படிங்க: அசாமில் கொடூரம்... நள்ளிரவில் கணவன் படுகொலை.!! சரணடைந்த மனைவி.!!

கொடூரமாக எரித்து கொலை

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ராகவேந்தரா, மாணவி இருந்த அறைக்குள் புகுந்து கதவை பூட்டினார். பின்னர் கொண்டு வந்திருந்த பெட்ரோல் ஊற்றி மாணவியை தீ வைத்துக் கொளுத்தினார். இந்த சம்பவத்தில் மாணவி கடுமையாக அலறி துடித்தார். எனினும் கதவு மூடப்பட்டிருந்ததால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சிறுமியை மீட்டனர். எனினும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறுமியை கொலை செய்த ராகவேந்திராவும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டார். மேலும் அவர் தப்பியோட முயன்ற போது சுற்றி வளைத்த பொதுமக்கள் அவரை கைது செய்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: பரீட்சை எழுத சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி... கற்பழிக்க முயன்ற மர்ம கும்பல்.!! தந்தை செய்த செயல்.!!