பரீட்சை எழுத சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி... கற்பழிக்க முயன்ற மர்ம கும்பல்.!! தந்தை செய்த செயல்.!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேர்வு எழுத சென்ற இளம் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இளம் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக தேர்விற்கு சென்ற மாணவி
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண், ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் உள்ள ஆர்கேடிஃப் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதுவதற்காக தனது தந்தையுடன் சென்றிருந்தார். தேர்வு மறுநாள் நடைபெறும் என்பதால் இளம் பெண்ணும் அவரது தந்தையும் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
பலாத்கார முயற்சி
இந்நிலையில் இளம் பெண்ணின் தந்தை இரவு உணவு வாங்குவதற்காக வெளியே சென்றிருக்கிறார். இதனை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம் பெண் தங்கியிருந்த அறைக்குச் சென்று அந்தப் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளது. அப்போது இளம் பெண்ணின் தந்தை அறைக்கு வரவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதையும் படிங்க: ÷2 மாணவி தொடர் பலத்தக்காரம்... பி.டி சார் தப்பியோட்டம்.!! போலீஸ் வழக்கு பதிவு.!!
காவல்துறையில் புகார்
இதனைத் தொடர்ந்து இளம் பெண் மற்றும் அவரது தந்தை தங்களது சொந்த ஊர் திரும்பினர். மேலும் இளம் பெண்ணிற்கு நடந்த கொடுமை குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இளம் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இதனைக் கண்டு தாங்க முடியாத தந்தை இளம் பெண்ணிற்கு நடந்த கொடுமை குறித்து மேற்கு வங்க காவல்துறையிடம் புகார் செய்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு எழுத சென்ற பெண்ணுக்கு நடந்த இந்த கொடுமை அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "வா ஜாலியா இருக்கலாம்..." கானகிரீட் ஸ்லாபல் அடித்து இளம்பெண் கொலை.!! 19 வயது இளைஞர் கொடூர செயல்.!!