அசாமில் கொடூரம்... நள்ளிரவில் கணவன் படுகொலை.!! சரணடைந்த மனைவி.!!



husband-brutally-murdered-at-midnight-wife-surrender-to

அசாம் மாநிலத்தில் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் சடலம்

அசாம் மாநிலம் திப்ருகர் நகரை சேர்ந்தவர் ராஜிப்(42). இவரது மனைவி சோனம். இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராஜிப் தனது படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

India

போலீசாரிடம் சரணடைந்த மனைவி

இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பேரதிர்ச்சியாக ராஜிபின் மனைவி தனது கணவனை கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் ராஜிப் வீட்டிற்கு சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதையும் படிங்க: பரீட்சை எழுத சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி... கற்பழிக்க முயன்ற மர்ம கும்பல்.!! தந்தை செய்த செயல்.!!

குடும்ப தகராறில் கொலை

மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சரணடைந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறில் கொலை நடந்தது தெரிய வந்திருக்கிறது. மனைவியால் கணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ÷2 மாணவி தொடர் பலத்தக்காரம்... பி.டி சார் தப்பியோட்டம்.!! போலீஸ் வழக்கு பதிவு.!!