இந்தியா

அடக்கொடுமையே! போதை தலைக்கேறி இந்த வாலிபர் செய்துள்ள மோசமான காரியத்தை பார்த்தீங்களா!!

Summary:

man bit snake

உத்தரபிரதேசம் ஈட்டா மாவட்டத்தை சேர்ந்த அஸ்ரோலி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜ்குமார், இவர் நேற்று மதுபோதையில் தனது வீட்டில் படுத்திருந்த பொழுது அவரது வீட்டிற்குள் நுழைந்த விஷ பாம்பு ஒன்று அவரை கொத்தியுள்ளது.

இதனால் பெரும் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மதுபோதையில் அந்த பாம்பை பிடித்து கடித்து துப்பியுள்ளார். இதில் பாம்பின் விஷம் இரத்தத்தில் கலந்து அளவுக்கு அதிகமாக உடலில் ஏறியதால் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாம்பை எடுத்துக்கொண்டு, ராஜ்குமாரையும் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement