ஹோட்டலில் சமோசா கேட்டது குத்தமா?.. வாடிக்கையாளரை வடிவேலு காமெடி பாணியில் அடித்து நொறுக்கிய பணியாளர்கள்.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் கஞ்சன்பாத் பகுதியில் முகமது பெரோஸ் என்ற நபர் வாலாபூர் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் சாப்பிட சமோசா கேட்டதாக கூறப்படும் நிலையில், கடை ஊழியர்களுக்கும்-முகமதுவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது முகமது கடுமையாக தாக்கப்படவே, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரிடமிருந்து புகாரை பெற்று உணவகத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.