ஒன்றா இரண்டா.. 180+ சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.. 19 வயது இன்ஸ்டா பிரபலம் திடுக் செயல்.. செல்போனெல்லாம் ஆ., வீடியோ.!



Maharashtra Shock 19-Year-Old Influencer Arrested for Alleged Abuse of 180 Minor Girls

19 வயதுடைய இன்ஸ்டா பிரபலம் 350 சிறுமிகள் & பெண்களை ஆபாசமாக படமெடுத்து, 180 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பரத்வாடா நகரில் வசித்து வருபவர் முகமது அயாஸ் என்ற தன்வீர் (வயது 19). இவர் முகநூல், இன்ஸ்டாகிராமில் வீடியோ, போட்டோ வெளியிட்டு பிரபலமான நபர் என்று கூறப்படுகிறது. மேலும், இவருக்கு வந்த வரவேற்பு சிறார்கள், இளம் தலைமுறை இடையே அதிகரித்த காரணத்தால், பலரும் இவருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

பாலியல் வன்கொடுமை:

சிறுமிகள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை சாதகமாக்கிக்கொண்ட நபர், சிறுமிகளிடம் பேசி வந்துள்ளார். தனது வலையில் விழும் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி மும்பை, புனே நகரங்களுக்கு அழைத்துச்சென்று ஆபாசமாகவும் வீடியோ எடுத்து இருக்கிறார். ஒருசில சிறுமிகளிடம், சிறுமிகளுக்கே தெரியாமலும் அந்தரங்க வீடியோ எடுத்து வைத்து இருக்கிறார். ஏராளமான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

sexual abuse

அம்பலமான உண்மை: 

தான் எடுக்கும் விடீயோக்களை காண்பித்து மிரட்டி சிறுமிகளை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்தவர், கொடூரத்திலும் உச்சமாக சிலரை பாலியல் தொழிலில் தள்ளி இருக்கிறார். மேலும், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களின் எதிர்காலம் குறித்த பயத்தால் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனிடையே, இந்த தகவலை அறிந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அணில் போண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடரும் நடவடிக்கை:

இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், முகமது அயாஸ் தன்வீர் மொத்தமாக 180 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும், அவரின் செல்போனில் 350 க்கும் அதிகமான அந்தரங்க விடியோக்கள் இருந்துள்ளது. தொடர்ந்து அயாசை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இவர் சிறுமிகளின் அந்தரங்க விடீயோக்களை நண்பர்களிடம் பகிர்ந்தாரா? பிற கும்பல்களுக்கு பகிர்ந்தாரா? என விசாரணை நடந்து வருகிறது. இணையத்தில் உலா வரும் பல விடீயோக்களை நீக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: ஒன்றா இரண்டா.. 58 பெண்களை சீரழித்த ஜோதிடர்.. ரகசிய வீடியோ லீக்.. பகீர் சம்பவம் அம்பலம்.!