ஒன்றா இரண்டா.. 58 பெண்களை சீரழித்த ஜோதிடர்.. ரகசிய வீடியோ லீக்.. பகீர் சம்பவம் அம்பலம்.!



nashik-horror-fake-astrologer-ashok-kharat-arrested-for

நாசிக்கில் 58 பெண்களை வன்கொடுமை செய்த ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகீர் புகார்:

Hidden Camera Footage: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், தன்னை ஜோதிடர் என்று கூறி பிழைப்பு நடத்தி வந்த பிரபலம் அசோக் காரத் (வயது 67). இவர் ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை வீரர் ஆவார். இதனிடையே, இவரிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற பெண்ணை, அசோக் போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து கேட்டதற்கு கணவரை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது. 

இதையும் படிங்க: மருத்துவ மாணவியை விடுதிக்கு அழைத்து வன்கொடுமை செய்த மருத்துவர்.. தேர்வில் உதவுவதாக கூறி கொடூரம்.!

58 பெண்கள்:

இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது பகீர் தகவல் வெளியானது. மேலும், அசோக் ஜோதிடம், ஆன்மிகம் என்ற பெயரில் மொத்தமாக 58 க்கும் மேற்பட்ட பெண்களை வன்கொடுமை செய்திருப்பது அம்பலமானது. இவர் தனது பண்ணை வீட்டில் ஜோதிட நிலையத்தை வைத்து நடத்தி இருக்கிறார். அங்கு தனது அறையில் பெண்களிடம் அத்துமீறுவதை ரகசிய கேமிரா வைத்தும் படம்பிடித்து இருக்கிறார். 

Crime

35 வயது பெண் புகார்:

காவல்துறையினர் சர்ச்சைக்குரிய புகாருக்கு பின்னர் விசாரணை நடத்தியபோது, அவரது அலுவலகத்தில் இருந்து பென்டிரைவ் மீட்கப்பட்டது. இந்த பென்டிரைவில் இதுதொடர்பான வீடியோக்கள் இருந்துள்ளன.  பல பெண்களை இவ்வாறாக பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், 35 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் அனைத்தும் அம்பலமாகி இருக்கிறது. உள்ளூரில் தன்னை கேப்டன் என்று அழைக்கும் வகையில் பெயரை வைத்திருந்தவர், திரை மறைவில் பல பெண்களை வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

Crime

கால்களை கழுவிவிட்டு ஆசி:

ஆன்மீக விஷயங்களுக்காக அசோக்கை சந்திக்கச் செல்லும் பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், கணவரை கொலை செய்திடுவேன், ஆன்மீக சடங்கு என்ற பெயரில் இவ்வாறான கொடுமைகளை செய்து இருக்கிறார். தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அசோக் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார். இவரிடம் பல அரசியல் பிரபலங்களும் காலை கழுவிட்டு ஆசி பெற்ற சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வேலைக்கு வந்த இடத்தில்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் திடுக் சம்பவம்.!