கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. கயவனை துரத்தி நொறுக்கியெடுத்த சிங்கப்பெண்...! வீரமங்கை அசத்தல் செயல்.!

21 வயது மாணவியிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்ற கயவனை பெண்மணி அடித்து நொறுக்கி காவல் துறையினர்வசம் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது. மாணவியின் தீர செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, குருவார் பேத் பகுதியில் 20 வயதுடைய பி.ஏ கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று சந்தைக்கு சென்றபோது, இவரை ஏற்கனவே கவனித்து வைத்திருந்த சாஹில் அடகலே என்ற கூலித்தொழிலாளி பின்தொடர்ந்துள்ளார்.
முதலில் இதனை கவனிக்காத கல்லூரி மாணவி, வாகனத்தை எடுக்க பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சாஹில் கல்லூரி மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் ஆவேசமடைந்த பெண்மணி தனது மாமாவுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துவிட்டு, சாஹிலை விரட்டி சென்றுள்ளார்.
மாணவியிடம் அத்துமீறிவிட்டு அவசரகதியில் தப்பி சென்ற கயவனை கல்லூரி மாணவி விரைந்து சென்று பிடித்து தாக்கி இருக்கிறார். பதிலுக்கு கயவனும் கத்தியை காண்பித்து மிரட்ட, தற்காப்பு கலை தெரிந்திருந்த மாணவி கத்தியை தட்டிவிட்டு பொதுமக்களிடம் கூச்சலிட்டு தகவலை தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு ஆவேசமடைந்த பொதுமக்கள் சாஹில் அடகலேவை நொறுக்கியெடுத்துள்ளனர். பின்னர், கல்லூரி மாணவியின் மாமா மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவே, அவர்கள் வசம் சாஹில் ஒப்படைக்கப்பட்டார். பெண் தரப்பில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாஹில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவியின் தீரச்செயலை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்.