வாரிசு படத்தின் வசூலை கேலி செய்த ப்ளு சட்டை மாறன்.! விஜய் ரசிகர்களால் தாக்குதல்.?!
தந்தை, தாத்தா, மாமாவால் 6 ஆண்டுகளாக சிறுமி பாலியல் பலாத்காரம்.. சொந்த குழந்தையை சீரழித்த பயங்கரம்.!
தந்தை, தாத்தா, மாமாவால் 6 ஆண்டுகளாக சிறுமி பாலியல் பலாத்காரம்.. சொந்த குழந்தையை சீரழித்த பயங்கரம்.!

17 வயது சிறுமியை அப்பா, தாத்தா, மாமா என 3 பேர் 6 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் 17 வயது சிறுமி, தனது 49 வயது தந்தையுடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் கல்லூரியில் தற்போது படித்து வருகிறார்.
இந்நிலையில், கல்லூரியில் நடந்த பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுமி, அதிகாரிகளிடையே தனக்கு நடந்த கொடுமை குறித்து பதைபதைக்க வைக்கும் தகவலை தெரிவித்து இருக்கிறார்.
அதாவது, சிறுமியை கடந்த 6 ஆண்டுகளாக அவரின் தந்தை, மாமா, தாத்தா ஆகியோர் சேர்ந்து தனித்தனியே வெவ்வேறு காலங்களில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 6 ஆண்டுகளாக சிறுமி பல துயரத்தை அனுபவித்து இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மாமா, தாத்தாவுக்கு வலைவீசப்பட்டுள்ளது.