வரதட்சணைக்காக கருவை கலைத்து, பெண் கொலை.. பெற்றோரை எதிர்த்து கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.!

வரதட்சணைக்காக கருவை கலைத்து, பெண் கொலை.. பெற்றோரை எதிர்த்து கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.!



Maharashtra Mumbai woman Murder by Husband and Family due to Dowry Issue

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், கணவரின் குடும்பத்தினர் கட்டாய கருக்கலைப்பு செய்த நிலையில், பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை தஹிஸார் பகுதியை சார்ந்த பெண்மணி பார்தி அடிவால் (வயது 22). இவரின் கணவர் பிரதீப். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயம் செய்துகொண்ட நிலையில், பிரதீப் மற்றும் அவரின் குடும்பத்தினர் குறித்து பெண்ணின் தரப்பு விசாரிக்கையில் நல்லவிதமாக தகவல் கிடைக்கவில்லை. 

இதனால் பார்தியின் பெற்றோர்கள் அவசரப்பட்டு நிச்சயம் செய்துவிட்டோம் என நினைத்து திருமணத்தை நிறுத்தியுள்ளனர். ஆனால், இடைப்பட்ட நாட்களுக்குள் எதிர்கால கணவரின் வார்த்தையை பெரிதும் நம்பிய பெண்மணி, குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி பிரதீப்பை கடந்த வருடத்தின் ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், வரதட்சணை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

மகள் தங்களின் விருப்பத்தை மீறி திருமணம் செய்ததால், முதலில் அவருக்கு நகைகள் ஏதும் கொடுக்கப்படாத நிலையில், பின்னாளில் வரதட்சணை கொடுமையால் மகள் கஷ்டப்படுகிறார் என்று தகவல் அறிந்த பெற்றோர்கள், மகளின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து பணம் மற்றும் நகை வழங்க முன்வந்துள்ளார்கள். அப்போதுதான், கணவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி செயல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு பின்னர் பெண்மணி கருவுற்ற நிலையில், அதனை வலுக்கட்டாபயப்படுத்தி கலைத்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் வீட்டினர், வரதட்சணை கொடுக்கும் செயலில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் மற்றும் அவரின் தாய், சகோதரி பார்தியிடம் வரதட்சணை வாங்கி வரக்கூறி தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ரூ.4 இலட்சம் மதிப்புள்ள பைக், ரூ.4 இலட்சம் ரொக்கம் கேட்டுள்ளனர்.

maharashtra

வரதட்சணை கொடுமையால் பார்தி தொடர்ந்து பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட, கடந்த ஜனவரி 12 ஆம் தேதி பெற்றோரை தொடர்பு கொண்ட பெண்மணி தன்னை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது, பெண்ணின் குடும்பத்தினர் வெளியூரில் இருந்ததால், 6 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று பார்தி தற்கொலை செய்துகொண்டதாக அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற குடும்பத்தினர், பார்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்தியின் கணவர் பிரதீப், அவரின் தாயார், பிரதீப்பின் சகோதரி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.