இந்தியா

அலுவலகத்திலேயே காதல் ஜோடி ஜல்சா.. ஆ., வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்.. நடந்த கொடூரம்..!

Summary:

அலுவலகத்திலேயே காதல் ஜோடி ஜல்சா.. ஆ., வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்.. நடந்த கொடூரம்..!

பிஸ்னஸ் பார்ட்னராக இருந்து, பெண்ணிடம் உல்லாசமாக இருக்கும் வீடியோவை படம் எடுத்து மிரட்டிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஜோகேஸ்வரியில் 23 வயதான ஒரு பெண், ஒரு வாலிபருடன் நோயியல் ஆய்வகத்தை தொடங்கியுள்ளார். அத்துடன் இவர்கள் இருவரும் பிஸ்னசில் பணம் முதலீடு செய்த நிலையில், லாபத்தில் 30 சதவீத பங்கினை பெண்ணுக்கு தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டு பிசினஸ் தொடங்கியுள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக பழகி வந்ததால், நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது.

மேலும், பிஸ்னஸ் தொடங்கிய  இடத்திலேயே இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். அப்போது உல்லாசமாக இருந்த காட்சியை வாலிபர் தனது கையில் கேமராவை வைத்து படம் பிடித்துள்ளார். இதற்கு அந்தப் பெண்ணும் 'இவரை தானே நாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம்' என எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.

ஆனால், இதற்குப்பின் தான் அந்த வாலிபர் தனது சுய ரூபத்தை  பெண்ணிடம் காண்பித்துள்ளார். பெண்ணிடம் இருந்து விலகி சென்றநிலையில், பணத்தையும் தர மறுத்துள்ளார். மேலும், அந்த பெண் பணம் கேட்டதற்கு, அவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோக்களை பெண்ணின் சகோதரருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அத்துடன் 'இனியும் நீ பணம் கேட்டால் இந்த வீடியோவை நான் சமூக வலைத்தளத்திலும் பதிவிடுவேன்' என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த பெண் பிசினஸ் பார்ட்னரான வாலிபர் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement