அதிபயங்கர அதிர்ச்சி! 18 வயசு கூட ஆகாமல் 55 சிறுமிகள் கர்ப்பம்! திருமணம் ஆகாமலே பிறந்த குழந்தைகள்.... மாநிலத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அரசு நடத்திய ஆய்வில் 18 வயதுக்குட்பட்ட 55 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு குழந்தை திருமணம் நடந்திருக்கிறது என்பது அதிகாரிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அங்கன்வாடி ஆய்வில் வெளிவந்த தகவல்
மகாராஷ்டிர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் குறித்து மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி அகோலே தாலுகாவில் அங்கன்வாடி ஊழியர்கள் சேகரித்த தகவல்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து, மத்திய அரசின் ‘மாத்ருத்வ வந்தனா யோஜனா’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பித்த பெண்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது கர்ப்பிணிகளாக பதிவு செய்யப்பட்டிருந்தவர்களில் 55 பேர் 18 வயது நிறைவடையாத சிறுமிகள் என்பது தெரியவந்தது.
54 பேருக்கு குழந்தை திருமணம்
முதற்கட்ட விசாரணையில், கர்ப்பமாக உள்ள 54 சிறுமிகளுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு சிறுமி திருமணமாகாமல் கர்ப்பமடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதில் சிலருக்கு ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளதும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் சமூக அவமதிப்பு மற்றும் காதலித்து வீட்டை விட்டு சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாக பெற்றோர் இத்தகைய சட்டவிரோத திருமணங்களை நடத்துவதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், மகாராஷ்டிர அரசு உடனடியாக தலையிட்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மைனர் பெண்களை திருமணம் செய்து வைத்தவர்கள் மற்றும் அதற்கு துணைநின்றவர்கள் மீது கடுமையான கிரிமினல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!