போலி பலாத்கார புகாரால் 2 ஆண்டு சிறை தண்டனை; ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் மனுதாக்கல்.!

போலி பலாத்கார புகாரால் 2 ஆண்டு சிறை தண்டனை; ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் மனுதாக்கல்.!



Madhya Pradesh Youngster Appeal Court Rs 10 Thousand Crore Penalty Fake Complaint Life Loss

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரத்தலமில் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இளைஞர் காந்து கான்டிலால் பீல் (வயது 35). இவரின் மீது 2018ல் பெண் பலாத்கார புகார் கொடுத்தார். அந்த புகாரில், காந்து தன்னை சகோதரரின் வீட்டில் விடுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். 

அதனைத்தொடர்ந்து, வேறொருவரிடம் என்னை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். அவரால் கடந்த 6 மாதமாக நான் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று தெரிவித்தார். இதன்பேரில், கடந்த 2020 டிசம்பர் மாதம் காந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

கிட்டத்தட்ட அவர் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தருணத்தில், கடந்த அக். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். விசாரணையில், அவரின் மீது பெண் போலியான புகார் அளித்தது அம்பலமானது. இதனால் மனவேதனையில் உச்சத்திற்கு காந்து சென்றுள்ளார். 

Madhya pradesh

தனது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி, தனது குடும்பத்தை வறுமையில் தள்ளிய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவெடுத்த காந்து, மத்திய பிரதேசம் மாநில அரசு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், "மனித உயிர் என்பது விலை மதிப்பு இல்லாதது. எனக்கு பல இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. எனது குடும்பத்தினர் உணவுக்காக பிச்சையெடுத்துவிட்டார்கள். நானும் பல கஷ்டப்பட்டுவிட்டேன். கடவுள் கொடுத்த வருமான பாலியல் இன்பம் கூட கிடைக்கவில்லை" என தெரிவித்துள்ளார். இம்மனு 10ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.