17 வயது சிறுமி 5 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பாஜக தலைவர் மகன் உட்பட 4 பேர் கைது.!



Madhya Pradesh Unnav Minor Girl Sexual Abuse 4 Held Inculding BJP MLA Son 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள டாடியா (Datia) மாவட்டம், உன்னவ் பகுதியில் 17 வயது சிறுமி, 19 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று 19 வயது பெண் தனது இளைய சகோதரியுடன் சென்றபோது, இருவரும் 4 பேர் கும்பலால் கடத்தப்பட்டனர். 

அங்குள்ள தனிமையான இடத்திற்கு சிறுமிகள் கடத்தி செல்லப்பட்டு, 17 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவர்களை கடத்தி கற்பழித்தது 17 வயது சிறுமியுடன் பயின்று வரும் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் பிடியில் இருந்து சிறுமி தப்பிவந்த நிலையில், 17 வயது சிறுமி மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், இளைய மகளிடம் விசாரித்தபோது விபரம் புரியவந்துள்ளது.

Madhya pradesh

இதனையடுத்து, காவல் துறையினருக்கு சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உள்ளூர் பாஜக தலைவரின் மகன், 3 சிறார்கள் உட்பட 5 பேர் கும்பல் நடத்திய பயங்கரம் தெரியவந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி அம்மாநிலத்தில் பல குற்றவழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படும் நிலையில், அவரின் விபரங்களை தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் மேற்கூறிய விஷயத்தை கையில் எடுத்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.