அப்பா இல்ல..! 5 சகோதரிகளுக்கு ஒரே தம்பி! கல்யாணமே பண்ணிக்காமல் தம்பியை படிக்க வைத்த 3 சகோதரிகள்! வக்கீலானவுடன் உயிரே போன கொடுமை... தம்பி உடலை பாடையில் சுமந்த உடன்பிறப்புகள்! கலங்க வைக்கும் சம்பவம்..!!!
மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் ஒரே நாளில் நடந்த தொடர் சாலை விபத்துகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக்கிழமைவும் நடந்த இந்த விபத்துகளில் இளம் வழக்கறிஞர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தூரில் நடந்த மோதி விபத்து
மண்டலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் வழக்கறிஞர் ஸ்வஸ்திக் படிதார், இந்தூரில் தனது பணிகளை முடித்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தகவலின்படி, தப்லா கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த மோதிர் விபத்தில் தலைக்காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஸ்வஸ்திக், ஐந்து சகோதரிகளின் ஒரே தம்பி. அவரை படிக்க வைக்க மூன்று சகோதரிகள் தங்களின் திருமண ஆசையையே தியாகம் செய்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கில் சகோதரிகளே பாடையை சுமந்து சென்றது மனதை உருக்கும் காட்சியாக இருந்தது.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளம் உயிர்கள் பலி! கடலூரில் பெரும் சோகம்.....
திருமண விழாவிலிருந்து திரும்பும் வழியில் விபத்து
அலிராஜ்பூர் மாவட்டம் போரி கிராமத்தில், சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் மற்றொரு சாலை விபத்து நிகழ்ந்தது. திருமண நிகழ்ச்சி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று நண்பர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. வீடு அருகே வெறும் 100 மீட்டர் தூரத்தில் நடந்த இந்த விபத்தில் அனில் (14), ரோஷன் (17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சவான் (14) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் தம்பதியினர் விபத்து
மும்பை – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர் மீது வேகமாக வந்த வாகனம் மோதியது. இதில் 3 வயது சிறுவன் சோட்டு உயிரிழந்தான். தந்தை காலு மற்றும் தாய் சவ்லி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் காலுவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மோதிய வாகனம் தப்பிச் சென்றதால், அதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் நடந்த இந்த விபத்துகள் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! தெலுங்கானா மாநில அரசு பேருந்து விபத்தில் பலி எண்ணிக்க 24 ஆக உயர்வு! சாலையில் சிதறி கிடக்கும் உடல்கள்....!!