இந்தியா

பில்லி சூனியத்தால் அண்ணன் தற்கொலை.. தம்பதியின் கதைமுடித்த பாசக்கார தம்பி.!

Summary:

பில்லி சூனியத்தால் அண்ணன் தற்கொலை.. தம்பதியின் கதைமுடித்த பாசக்கார தம்பி.!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டம், சவுராய் கிராமத்தை சேர்ந்தவர் சமீர் சிங் குலாஸ்தே (வயது 60). இவரின் மனைவி சியாபாய் (வயது 55). இவர்கள் இருவரும் கடந்த 9 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட தம்பதியின் நெருங்கிய உறவினரான தயாராம் குலாஸ்தே (வயது 27) என்ற வாலிபரை விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் கைது செய்தனர். 

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சமீர் சிங் குலாஸ்தே மற்றும் சியாபாய் ஆகியோர் மாந்த்ரீக தொழில் செய்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து வைத்த பில்லி சூனியத்தால் தனது சகோதரர் தற்கொலை செய்துவிட்டதாக தயாராம் எண்ணியுள்ளார். இதனால் கொலை நடந்துள்ளது. 


Advertisement