இந்தியா Covid-19

வேகமெடுக்கும் கொரோனா!! 2 நாள் ஊரடங்கு அறிவிப்பு!!

Summary:

நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பினால் கேரளாவில் ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்களி

நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பினால் கேரளாவில் ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை தற்போதுதான் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து, ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் பலமடங்கு குறைந்துள்ளது.

ஆனால் இந்தியவிலையே அதிகபட்சமாக கேரளாவில்தான் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கேரளாவில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அங்கு அதிகரித்துவருவதால் கேரளாவில் ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement