இந்தியா லைப் ஸ்டைல் டெக்னாலஜி

இனி பெண்களை தப்பாக தொட்டால் லிப்ஸ்டிக் வெடிக்கும்..! வந்துவிட்டது புது ஆன்டி ரேப் கன்.!

Summary:

Lipstick gun for girls

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கு என்கவுண்டர், நிர்பயா கொலை கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனை, இப்படி அரசும், நீதிமன்றமும் எவ்வளவோ கடுமையாக தண்டித்தும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் பெண்கள் ஆபத்தாக உணரும் சமயங்களில் அவர்களை அவர்களே பாதுகாத்துக்கொள்ள வெறும் 600 ரூபாய் மதிப்புள்ள லிப்ஸ்டிக் வடிவிலான துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ஷ்யாம் என்ற இளைஞர்.

இதுபற்றி அவர் கூறுகையில், பெண் தனக்கு பிரச்னை ஏற்படும் போது இந்த லிப்ஸ்டிக்கில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். உடனே துப்பாக்கி வெடிப்பதுபோல் பெரிய சத்தம் வரும், அதனுடன் உடனடியாக அவசர உதவி எண் 112-க்கு உதவி கோரி குறுந்தகவல் செல்லும்.

மேலும், மொபைல் போன் மூலம் ப்ளூடூத் இணைப்பையும் இதில் மேற்கொள்ளலாம் என்றும், இந்த கருவியை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் இதில் இருப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். இதனை விலை 600 மட்டுமே என்றும், இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கிக்கு காப்புரிமை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் எனவும் ஷ்யாம் கூறியுள்ளார்.


Advertisement