என்னது சிங்கத்துக்கு கொரோனாவா!! சிங்கங்களையும் சீண்டியது கொரோனா வைரஸ்!lions-affected-for-corona

இந்தியாவில் முதன் முறையாக கொரோனா வைரசால் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் சுமார் 10 வயதுடைய 12 சிங்கங்கள் உள்ளன. இந்த சிங்கங்கள் சில கடந்த சில நாட்களாக பசியின்மை, இருமல் போன்றவற்றால் அவதிப்பட்டுவருவதை ஊழியர்கள் கவனித்துள்ளனர். இதனை அடுத்து சிங்கங்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு, அவற்றை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவற்றிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவில் இதேபோன்று கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 8 புலிகள் மற்றும் சிங்கங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டன. ஆனால் காட்டு விலங்குகளில் இதுபோன்ற பாதிப்பு இருப்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை எனவும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.