மார்ச் 31-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவேண்டும்.! இல்லாவிட்டால் என்ன சிக்கல் தெரியுமா.?

மார்ச் 31-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவேண்டும்.! இல்லாவிட்டால் என்ன சிக்கல் தெரியுமா.?



link-aadhar-and-pan-number-must

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அதனை இணைப்பதற்கான கெடுவை பல முறை தள்ளி வைத்தது. இந்த நிலையில் வரும் மார்ச் 31 தேதி பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

PAN என அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பான் அட்டை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272 B-ன் கீழ் ஆவணங்களை இணைக்கத் தவறும் நபர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.