வீடியோ: நொடிப்பொழுதில் நடந்த சோகம்.. மனிதர்கள் மீது கொடூரமாக தாக்கிய மின்னல்.. ஒருவர் உயிரிழப்பு..

வீடியோ: நொடிப்பொழுதில் நடந்த சோகம்.. மனிதர்கள் மீது கொடூரமாக தாக்கிய மின்னல்.. ஒருவர் உயிரிழப்பு..


lightning-strucked-shock-video

டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்தது. இந்தநிலையில் அரியானா மாநிலம் குர்கான் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் மழை பெய்துகொண்டிருக்கும்பொழுது, மழையில் நனையாமல் இருப்பதற்காக நான்கு நபர்கள் ஒரு மரத்தடியில் நின்றுக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென மரம் மீது மின்னல் தாக்கி தீப்பற்றியுள்ளது, இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நான்கு பேரும் பேச்சு மூச்சு இல்லமால் தரையில் விழுந்து கிடந்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியினர் அந்த நான்கு போரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் பயங்கர தீ காயத்துடன் தீவிர சிகிச்சை பிரவில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் மின்னல் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.