பிரபல மருத்துவமனை கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட மொபைல்! இளம்பெண் மற்றும் தாயை வீடியோ எடுத்த ஊழியர்.... அதிர்ச்சி வீடியோ!!!
கொல்கத்தாவில் உள்ள ரூபி ஜெனரல் மருத்துவமனையில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்யம்கிராம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாயுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பெண்கள் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட மொபைல் மூலம் வீடியோ எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட மொபைல்
மருத்துவமனைக்கு வந்த இளம்பெண் மற்றும் அவரது தாய் பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளனர். அவர்கள் வெளியே வரும்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான நிலையில் ஒரு மொபைல் போன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கவனித்தனர். அருகில் பார்த்தபோது அது வீடியோ பதிவு செய்யும் நிலையில் இருந்ததாக தகவல். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக சத்தமிட்டனர்.
இதையடுத்து அங்கு இருந்தவர்களின் கவனத்திற்கு வந்த சம்பவத்தில், அந்த மொபைலை வைத்திருந்த நபர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் என்பதும் தெரியவந்தது. இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நடுத்தெருவில் குழந்தைகள் விளையாடும் போது நடந்த பயங்கரம்! அலறி அடித்து சிதறி ஓடும் குழந்தைகள்... கொலை நடுங்க வைக்கும் வீடியோ..!!
நிர்வாகத்தின் அலட்சியம் குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் நிர்வாகம் தெளிவான நடவடிக்கை எடுக்காமல் மழுப்பலான பதில்களையே வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மேலும் அதிகரித்தது. பாதுகாப்பான இடமாக கருதப்படும் மருத்துவமனையிலேயே இத்தகைய மறைமுக வீடியோ பதிவு நடந்தது பொதுமக்களிடையே அதிருப்தியை கிளப்பியுள்ளது.
போலீஸ் நடவடிக்கை... ஆனால் கைது தாமதம்
நிர்வாகம் ஒத்துழைக்காததால், இறுதியில் பாதிக்கப்பட்ட பெண் 100 என்ற எண்ணுக்கு அழைத்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆனந்தபூர் போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் அந்த நபர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பெண்கள் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகள் எழுந்துள்ள நிலையில், மருத்துவமனையின் இந்த பாதுகாப்பு குறைபாடு சமூக வலைதளங்களிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
Ruby General Hospital में एक बेहद शर्मनाक और चिंताजनक घटना सामने आई!
मध्यमग्राम की एक लड़की अपनी माँ के साथ डॉक्टर को दिखाने आई थी, डॉक्टर से मिलने के बाद जब वे दोनों महिला शौचालय गईं, तब उन्हें अंदाज़ा भी नहीं था कि उनके साथ ऐसा घिनौना हादसा होने वाला है।
बाहर निकलते समय… pic.twitter.com/5t3xIXgWk2
— Zoya Khan (@Zoyakhan7025) April 19, 2026
இதையும் படிங்க: கோச்சிங் சென்டரில் நடந்த கொடூரம்! மாணவியை செருப்பால் அடிச்சு, தலை முடியை இழுத்து....வக்கிரம் பிடிச்ச வாத்தியாரின் வீடியோ!!!