ரப்பர் பந்தை விழுங்கி, 11 மாத கைக்குழந்தை மூச்சுத்திணறி பரிதாப மரணம்.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!

ரப்பர் பந்தை விழுங்கி, 11 மாத கைக்குழந்தை மூச்சுத்திணறி பரிதாப மரணம்.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!


kerala-trichur-thrissur-11-month-baby-died-eat-rubber-b

விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிய குழந்தை, ரப்பர் பந்தை விழுங்கி மூச்சுத்திணறி துடிதுடிக்க உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், இரிஞ்சிஞாலகுடா பகுதியில் வசித்து வருபவர் நிதின். இவரின் மனைவி தீபா. தம்பதிகளுக்கு மீரவ் கிருஷ்ணன் என்ற 11 மாத ஆண் குழந்தை இருக்கிறார். நிதின் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், விடுமுறையில் குழந்தையை பார்க்க ஊருக்கு வந்து செல்வது வழக்கம். 

அவ்வாறாக குழந்தையை பார்க்க வரும்போதெல்லாம் அதிகளவில் விளையாட்டு பொருட்களை வாங்கி வந்துள்ளார். சமீபத்தில் ஊருக்கு வந்தவர் கடந்த வாரத்தில் வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று குழந்தை விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.

KERALA

அப்போது, அதில் இருந்த ரப்பர் பந்தை எடுத்து விழுங்கியதாக தெரியவருகிறது. பந்து குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்ட நிலையில், அதனால் மூச்சு விட இயலாமல் திணறி மயங்கியுள்ளது. இதனால் அதிச்சியடைந்த தீபா, குழந்தையை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

மருத்துவர்கள் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த பந்தை எடுக்க முயற்சி செய்த நிலையில், குழந்தை பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.