இந்தியா

வீல்சேரில் வாழ்க்கை..! நடக்க முடியாத இளைஞரை திருமணம் செய்த கேரளா இளம் பெண்..!

Summary:

Kerala pranav sahana facebook love marriage

நடக்க முடியாமல் வீல்சேரில் வாழ்க்கையை கடத்தி வரும் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை இளம்பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த பிரணவ் (27) என்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி நடக்கும் திறனை இழந்துள்ளார். இதனால், தனது வாழக்கையை வீல்சேரில் அமர்த்தவாறு வாழ்ந்துவந்த இவர், அவ்வப்போது ஏதேனும் வீடியோவை முகநூலில் பதிவிட்டுவந்துள்ளார். இவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் கேரளாவை சேர்ந்த சஹானா என்ற இளம் பெண் பிரணவ்விற்கு முகநூலில் பிரென்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார்.

பின்னர், பிரணவ்வின் தொலைபேசி எண்ணை எடுத்து அவரிடம் பேச தொடங்கியுள்ளார். ஒருகட்டத்தில் சஹானா பிரணவ்வை காதலிப்பதாக கூற, அதற்கு பிரணவ் மறுத்துள்ளார். ஆனாலும், சஹானா விடுவதாக இல்லை. தனக்கு வேறொரு காதல் இருப்பதாக நண்பர்கள் மூலம் சஹானாவிடம் கூற வைத்துள்ளார் பிரணவ். ஆனாலும் தனது காதலை விட்டுக்கொடுப்பதாக இல்லை சஹானா.

ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இருவரின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர இருவர் வீட்டில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கையில் 500 ரூபாய் பணத்துடன் சஹானா வீட்டில் இருந்து கிளம்பி, பிரணவ் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனை அடுத்து, நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் சமீபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.


Advertisement