மாமூல் கொடுக்காததால் பெண் பாலியல் வன்கொடுமை.. பட்டப்பகலில் 6 பேர் கும்பல் பகீர் செயல்.!



Kerala Horror Woman Sexually Assaulted by Six-Member Gang for Refusing Extortion Money

மசாஜ் மைய பெண் ஊழியர் 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

மாமூல் கேட்டு மிரட்டல்:

கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஆயுர்வேத மசாஜ் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் உரிமையாளர் ரூ.50,000 மாமூல் தர மறுத்ததையடுத்து, உள்ளூர் தாதா கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. மேலும், பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளது. 

இதையும் படிங்க: "பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை..." பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை.!!

தாக்குதல் சம்பவம்:

கடந்த பிப்.1-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் மசாஜ் மைய உரிமையாளரிடம் ரூ.50,000 மாமூல் கேட்டுள்ளது. உரிமையாளர் ரூ.10,000 வழங்கியதால் ஆத்திரமடைந்த கும்பல் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளது. மசாஜ் மையத்திற்குள் புகுந்த அந்த கும்பல் ஊழியர்கள் மற்றும் அங்கு இருந்த பெண் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. 

Sexual assault

இருவர் கைது, எஞ்சியவர்களுக்கு வலை:

வரவேற்பு அறையில் இருந்த பெண் ஊழியரை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த கொடூர செயலை வீடியோ எடுத்தும் மிரட்டி இருக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த துணிகர செயல் உள்ளூர் மக்களிடையே தெரியவந்து அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பின் பாதிக்கப்பட்ட பெண் திருவல்லா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சுபின் அலெக்ஸாண்டர் சார்கோ (29) மற்றும் பெர்லின் தாஸ் (38) ஆகிய இருவரை கைது செய்தனர். பிறருக்கு வலைவீசப்பட்டுள்ளது. கைதான சுபின் மீது ஏற்கனவே பல வழக்குகளும் நிலுவையில் இருந்துள்ளன. 

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை திட்டமிட்டு சீரழித்த காம பேராசியர்கள்.. வீடியோ எடுத்து நடந்த கொடுமை.!