இந்தியா

வலையில் சிக்கிய திமிங்கலத்தை உயிரை பணையம் வைத்து மீண்டும் கடலுக்குள் இறக்கிவிட்ட மீனவர்கள்! வைரலாகும் வீடியோ

Summary:

Kerala fishermen helped whale shark get into sea

கேரளாவின் கோலிக்கோட்டின் புதியப்பா மீன்பிடித் துறையை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடிப்பதற்காக அவர்கள் வீசிய வலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று சிக்கியுள்ளது. 

முதலில் திமிங்கலம் என்று உணராத அவர்கள் வழக்கம்போல வலையை அவர்களின் படகிற்கு ஏற்றியுள்ளனர். மேலே வந்தபிறகு தான் வலையில் இருந்தது திமிங்கலம் என தெரியவந்துள்ளது. 

உயிருடன் இருந்த அந்த திமிங்கலத்தை அவர்கள் மீண்டும் கடலுக்குள்ளேயே இறக்கிவிட முடிவு செய்துள்ளனர். ஆனால் திமிங்கலம் உயிருடன் மற்றும் மிகப்பெரியதாக இருந்ததால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனினும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உயிரை பணயம் வைத்து அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் வெற்றிககரமாக இறக்கிவிட்டனர். இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement--!>