13 வயது தங்கைக்கு அண்ணண் செய்யும் காரியமா இது?.. கேட்கவே பதைபதைக்கும் மனம்.. செக்ஸ் கல்வி கேட்கும் நீதிமன்றம்..!

13 வயது தங்கைக்கு அண்ணண் செய்யும் காரியமா இது?.. கேட்கவே பதைபதைக்கும் மனம்.. செக்ஸ் கல்வி கேட்கும் நீதிமன்றம்..!


Kerala 13 aged Minor Girl Abused by 16 Aged Minor Brother

கேரளா மாநிலத்தில் 13 வயது சிறுமியை அவரின் 16 வயது சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், அவரின் வயிற்றில் 30 வார கருவானது உருவாகியுள்ளது. இந்த கருவினை கலைக்க அனுமதி வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

இம்மனுவை விசாரணை செய்த நீதிபதி கருவை கலைக்க அனுமதி வழங்கிய நிலையில், அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு நடக்க வேண்டும் என நிபந்தனையும் விதித்தது. கருக்கலைப்பில் குழந்தை உயிருடன் இருக்கும் பட்சத்தில், அதனை அரசு வளர்க்க வேண்டும் அல்லது சிறுமியின் பெற்றோர் வளர்க்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. 

இந்த வழக்கின் தீர்ப்பில் அரசுக்கும் பரிந்துரை செய்த நீதிமன்றம், கேரளாவில் மைனர் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்துள்ளதால் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே செக்ஸ் கல்வி பயிற்றுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.