"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
தொடங்குகிறது கோடை.. அமலாகிறது மெகா மின்வெட்டு?... மக்கள் கவலை..!
கோடைகாலம் தொடங்கும் காரணத்தால் மின்வெட்டு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் தினசரி மின்தேவை 7,193 மெகாவாட்டாக உள்ளது. தற்போதைய ஆதாரங்கள் மூலமாக அம்மாநிலத்தால் 4,136 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து 2,200 மெகாவாட் மின்சாரம் கிடைத்தாலும், 800 முதல் 900 மெகாவாட் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அங்குள்ள ராய்ச்சூர் அனல்மின் நிலையத்தில் 8 மின்னுற்பத்தி அலகுகள் இருந்தாலும், நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ராய்ச்சூர் அனல்மின்நிலைய மொத்த உற்பத்தி திறனான 1,720 மெகாவாட்டில் இருந்து, 630 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி தற்போது செய்யப்படுகிறது.
கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு நகருக்கு தினமும் 103 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், அவர்களுக்கு 70 மெகாவாட் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. கோடைகாலங்கள் தொடங்கினால் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், தட்டுப்பாடும் என்றும் என்றும் தெரியவருகிறது.
அம்மாநிலத்தில் உள்ள அணைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீர் மின் உற்பத்தி மூலமாக 1,700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ள நிலையில், நீர் இருப்பு காரணமாக 300 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஷரவாதி, வராகி மற்றும் சூபா அணையில் 37 % நீர் மட்டுமே இருப்பு உள்ளதால், வரும் நாட்களில் மின்னுற்பத்தி மேலும் குறையலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில், கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, கர்நாடகாவில் பி.யூ.சி மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நடைபெற ஆயத்தப்பணிகள் நடப்பதால், தேர்வு முடிந்ததும் கட்டாயம் மின்வெட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.