தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
காதலை கைவிட்ட காதலி.. பெண்ணின் வீட்டு முன் காதலன் செய்த ரகளை.. ஊசலாடும் உயிர்.!
காதல் தோல்வியால் மனத்துடைந்த வாலிபர், காதலியின் வீட்டு முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம், ஓசநகர் ஓரபைலு கிராமத்தை சார்ந்தவர் மஞ்சுநாத் (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவிடவே, இருவரும் கடந்த 8 வருடமாக உயிருக்கு - உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் பின்னாளில் செல்போன் எண்ணை பகிர்ந்துகொண்டு பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மஞ்சுநாத்திடம் காதலி பேசாமல் இருந்துள்ளார். மேலும், சந்திப்பையும் தவிர்த்துள்ளார். காதலை முறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, மஞ்சுநாத் காதலியிடம் கேட்டபோது, அவர் சரிவர பதில் தெரிவிக்கவில்லை.
இதனால் மனவேதனையடைந்த மஞ்சுநாத், நேற்று முந்தினம் காதலியின் வீட்டு முன்பு சென்று காதலியை அழைத்தபடி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். விஷத்தை குடித்தவாறே கத்தி கூச்சலிட்ட மஞ்சுநாத், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிவமொக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஓசநகர் காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மஞ்சுநாத் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.