குடிபோதையில் பேருந்தில் ஏற முயன்றவரை எட்டியுதைத்து கீழே தள்ளிய அரசுப்பேருந்து நடத்துனர் : பகீர் வீடியோ வைரல்.!

குடிபோதையில் பேருந்தில் ஏற முயன்றவரை எட்டியுதைத்து கீழே தள்ளிய அரசுப்பேருந்து நடத்துனர் : பகீர் வீடியோ வைரல்.!


karnataka-dakshina-kannada-govt-bus-conductor-attacked-UCLRB4

அரசுப்பேருந்தில் ஏற முயற்சித்த பயணியை நடத்துனர் கால்களால் எட்டி உதைத்து கீழே தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னடா மாவட்டம், கள்ளியா ஈஸ்வர மங்கலத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. நேற்று மதுபானம் அருந்திய நபரொருவர் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். 

அப்போது, அவ்வழியே கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து வந்துவிட, அப்பேருந்தில் மதுபோதை ஆசாமி ஏறிச்செல்ல முற்பட்டுள்ளார். 

karnataka

பேருந்தில் ஏறவிருக்கும் பயணி மதுபோதையில் இருப்பதை உறுதி செய்த நடத்துனர், அவரை பேருந்தில் இருந்து இறங்கி செல்ல வற்புறுத்தியுள்ளார். அவர் செல்ல மறுத்ததால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து கால்களால் எட்டி உதைத்து கீழே தள்ளுகிறார். 

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், கர்நாடக போக்குவரத்து கழக நடத்துனருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த சர்ச்சையில் சிக்கிய கிருஷ்ணப்பா பணியிடை நீக்கம் செய்யபட்டார்.