இன்னும் 3 மாதங்கள் தான்; மஹாராஷ்ட்ராவை போல் கர்நாடகத்திலும் அரசியல் பிரச்சனை - பாஜக மூத்த தலைவர் பரபரப்பு பேட்டி.!



Karnataka BJP Eswarappa about Karnataka Govt 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, அக்கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அந்த பேட்டியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த அரசியல் மாற்றம் போல கர்நாடக மாநிலத்திலும் அரசியல் மாற்றம் நடைபெறும். பாஜக அணிக்கு வந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

Karnataka BJP

கர்நாடகா காங்கிரஸ் அரசு இன்னும் மூன்று மாதங்கள் கூட இருக்காது. மதமாற்றத் தடை சட்டம், பசுவதை தடை சட்டத்தை அரசு வாபஸ் பெற்றுள்ளது. இது சரியானது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.