இந்தியா

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மிஸ் பண்ணீடாதிங்க!. 1054 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது!.

Summary:

Job vacancies in police department

மத்திய உளவுத்துறை போலீஸ் படைகளிலன் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ. நுண்ணறிவுத் துறை போலீஸ் பிரிவிற்கு தற்போது செக்யூரிட்டி அசிஸ்டன்ட் (குரூப்-சி) பணிகளுக்கு 1054 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அனைத்து மாநில கிளைகளிலும் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக டெல்லிக்கு 228 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 620 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 187 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 160 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 87 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

இதே துறையில் பணிபுரிபவர்கள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியிடங்கள் உள்ள மண்டல மொழியை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10-11-2018-ந் தேதியாகும்.

விண்ணப்பதாரர் ரூ.50 தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.mha.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கவும்.

 


Advertisement