இந்தியா

ஒரு தடவை கூட பார்க்கவில்லையே.! ஆசை நிறைவேறாமலே போய்விட்டது! வீரமரணம் அடைந்த குமார் ஒஜா! கதறும் குடும்பத்தினர்!

Summary:

Jawan kumar ojha dead in ladak attack

கிழக்கு லடாக்கின் கல்வான்  பள்ளத்தாக்கு பகுதியில், சில தினங்களுக்கு முன்பு  இந்தியா மற்றும் சீன ராணுவ படையினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் நாட்டிற்காக வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் லடாக் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

லடாக் மோதலில்  உயிரிழந்த 20 ராணுவ வீரர்களில் ஒருவர் ஜார்கண்ட், சாஹெப்கஞ்ச் மாவட்டம் திஹாரி கிராமத்தை சேர்ந்த குந்தன் குமார் ஒஜா.  26 வயது நிறைந்த இவர் 2011ம் ஆண்டு இராணுவத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இவரது மனைவி நேஹா தேவி. இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் குமார் ஒஜாவிற்கு  கடந்த 15 தினங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையான மகிழ்ச்சியில் இருந்த குமார் ஒஜா எல்லைப் பகுதியில் பதற்றம் தணிந்த பிறகு தனது மகள் தீக்ஷாவை பார்க்க வருவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஆனால் அவர் எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த நிலையில்,  அவர் வருவதாக கூறிய அந்த நாள் இனிமேல் ஒருபோதும் வராது. அவர் ஒரு தடவை கூட தனது மகளின் முகத்தை பார்க்கவில்லை. அவரது ஆசை நிறைவேறாமலே போய்விட்டது என வீரர் குமார் ஒஜாவின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 


Advertisement