இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டர் - இந்திய இராணுவம் அதிரடி.!

Summary:

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டர் - இந்திய இராணுவம் அதிரடி.!

நவ்காம் பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, பாதுகாப்பு படையினரை கண்ட பயங்கரவாதிகள் தாக்குதலை தொடங்கவே, ஜம்மு காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

அவர்கள் குறித்த விசாரணையில், சுட்டு கொல்லப்பட்ட மூவரும் லஷ்கர்-இ-தொயபா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. இவர்கள் மூவரும் சமீபத்தில் சரபஞ்ச் பகுதியில் சமீர் பட் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது அம்பலமானது. 


Advertisement