“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
அப்பாவிடம் பேசிய கடைசி போன் கால்...! அடுத்த நொடி ஆற்றில் குதித்த 21 வயது இளம்பெண்! தடுக்க முயன்றும் முடியாமல் தவித்த தந்தை....! பதறவைக்கும் பின்னணி...!!!
ஜம்மு காஷ்மீரில் 21 வயது இளம்பெண் பாயல் தேவி செனாப் ஆற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மதியம் பிரேம் நகர் அருகே உள்ள சிவா தல் பாலத்தில் இந்த சம்பவம் நடந்தது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கினர். ஆனால், இதுவரை பாயல் தேவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
தந்தையிடம் பேசிவிட்டு பாலத்துக்கு சென்ற இளம்பெண்
கிராமத் திருவிழாவுக்கு சென்றிருந்த பாயல் தேவி, உடல்நிலை சரியில்லை என தந்தையிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் தனக்கு அறிமுகமான ஒருவரின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார். அதன்பின் அங்கிருந்து ஓடி செனாப் ஆறு அமைந்துள்ள பாலத்தை நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆற்றில் குதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் தந்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். தனக்கு யாரும் தொந்தரவு தரவில்லை என்றும், தனது வாழ்க்கை தொடர்பாக தானே முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை சமாதானப்படுத்த முயன்றபோதும், பாயல் தேவி 'பை-பை அப்பா' என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுக்க முயன்றும் ஆற்றில் குதித்தார்
பாலத்தின் விளிம்பில் பாயல் தேவி நிற்பதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் ஆற்றில் குதித்துவிட்டார். நடந்தவற்றை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மீட்புப் படையினர் தீவிர தேடுதல்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களுடன் இணைந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றின் நீரோட்டம் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாயல் தேவியின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: வகுப்பறைக்கு 10 நிமிடம் லேட்டாக போன 8 வயது சிறுமி! ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனையால் நடந்த அதிர்ச்சி..... பதைபதைக்கும் காட்சி!!!