ஒரேநாளில் 15 ஆயிரம் திருமணம்.. அட்சய திருதியை நாளில் மாநிலமே திருமணக்கோலம்.!



Jaipur Rajasthan Marriage

புதிய தொடக்கத்திற்கு அட்சய திருதியை நன்னாளாக கருதப்படும் நிலையில், வடமாநிலத்தில் இந்நாளில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். மேலும், இந்நாளில் திருமணம் செய்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது அவர்களின் ஐதீகம். 

இதனால் வருடா வருடம் அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் 15 ஆயிரம் திருமணங்கள் மாநிலம் முழுவதும் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அம்மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் 3 ஆயிரம் திருமணங்கள் செய்ய பந்தல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என பந்த அமைப்பாளர் சங்க தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறாக மாநிலம் முழுவதும் சேர்த்து 15 ஆயிரம் திருமணங்கள் நடக்கவுள்ளன.