இந்தியா

வெறும் 400 ரூபாயில் கோவாவை சுற்றி பார்க்கலாம்! IRCTC புதிய திட்டம் அறிமுகம்

Summary:

irctc introduces 400 rupees package for goa tour

கோவாவை ஒருநாளில் சுற்றிப்பார்க்க வெறும் 400 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே (IRCTC) புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

கடற்கரை நகரமான கோவாவை சுற்றி பார்க்க வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். வாழ்நாளில் ஒருமுறையாவது அங்கு சென்று விட வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவர். இதற்கு காரணம் கோவாவின் கடற்கரை அழகு, போர்ச்சுகீசியர்களின் கட்டிடக்கலை அழகு மற்றும் இன்னும் பல சுவாரசியங்களும் அங்கு மிகுந்த இருப்பதுதான்.

கோவா க்கான பட முடிவு

கோவாவில் சுற்றிப் பார்ப்பதற்கு அங்கே சிறிய சிறிய சுற்றுலாத்தலங்கள் உள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து கோவாவிற்கு செல்பவர்கள் அந்த அனைத்து இடத்திற்கும் சென்று சுற்றி பார்ப்பதற்கென்றே பல ரூபாய்களை செலவு செய்கின்றனர். அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க டாக்சியின் மூலமோ அல்லது பேருந்துகளில் மூலம் தான் செல்ல வேண்டும். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் டாக்ஸி டிரைவர்கள் மிகவும் அதிக தொகை வசூலிக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

irctc க்கான பட முடிவு

இதனைக் கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் கோவாவின் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க இந்தியன் ரயில்வே  irctc புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு நபர் வெறும் 400 முதல் 600 ரூபாய்க்குள் கோவாவில் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்க்கலாம். 

goa

இதில் மூன்று விதமான திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது IRCTC. கோவா தெற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வடக்கு என 3 திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. தெற்கு மற்றும் வடக்கு கோவாவை தனித்தனியாக சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் என்றும் தெற்கு மற்றும் வடக்கு கோவா இரண்டையும் சுற்றிப்பார்க்க ரூபாய் 600 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தாங்கள் சுற்றுப்பயணம் செய்யும் நாளுக்கு 4 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பொழுது அவர்கள் செல்ல வேண்டிய பகுதி மற்றும் அவர்கள் ஏறும் இடத்தினை தெரிவிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அவர்கள் குறிப்பிடும் இடத்தில் irctc ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேருந்தில் ஏற்றிக்கொள்ளப்படுவர்.

சுற்றுலா பயணிகள் IRCTC இணையதளத்தில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு ஒரு இமெயில் அனுப்பப்படும். அவர்கள் பேருந்தில் ஏறும் பொழுது அந்த ஈமெயில் பிரிண்ட் செய்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்பட்ச்சத்தில் அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டு மீத தொகை திருப்பி செலுத்தப்படும்.

irctc


Advertisement