சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
கால் உடைத்து, மர்ம உறுப்பில் தீ வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்! வெளியான அதிர்ச்சி காரணம்!
கேரளா மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் படுத்து தூங்கியுள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் வைத்திருந்த அவரது பையை காணவில்லை. இந்நிலையில் அந்த நபர் இது குறித்து அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவரிடம் கேட்டுள்ளார். மேலும் குறித்த நபரின் அங்க அடையாளங்களையும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த ஆட்டோ டிரைவர் தனக்கு அந்த நபரை தெரியும் எனவும், அவரிடம் அழைத்துச் செல்வதாகவும் கூறி அஜீஸ் என்ற மனநிலை பாதிக்கப்பட்டவரிடம் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரை கடத்திய, பணத்தை பறிகொடுத்த கும்பல் திருடிய பணத்தை கொடுக்குமாறு அஜீஸை அடித்து துன்புறுத்தியுள்ளனர். ஆனால் அவரோ நான் திருடவில்லை என கதறி அழுதுள்ளார்.
இருப்பினும் அதனை சற்றும் பொருட்படுத்தாத அந்த கும்பல் அவரை அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் வயல்வெளியில் தூக்கி வீசியுள்ளனர். அதனை தொடர்ந்து திருவனந்தபுரம் அடுத்த திருவல்லம் பகுதி, வயக்காட்டில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த அவர்கள் அஜீஸை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜீத் கால் உடைக்கப்பட்டு, ஆணுறுப்பு தீ வைத்து கொடுமைபடுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து போலீசார்கள் ஆட்டோவில் ஏற்றிய அந்த கும்பலை கண்டுபிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.