இந்தியா வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது?நாடாளுமன்றத்தில் இன்று தெரிந்துவிடும்!

Summary:

indian Economic Survey

2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றத்தில் நாளை நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதன்பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பொருளாதார ஆய்வறிக்கையின் பிரதிகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 
 


Advertisement