இந்தியா

சாலையோரத்தில் தூங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தை.. 20 வயது இளைஞரின் கொடூர செயல்.!

Summary:

india/mumbai-railway-bridge-youth-abused-three-and-half-old-girl

மும்பையில் தங்குவதற்கு இடமின்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பாலத்திற்கு அடியில் ஒரு தம்பதியினர் தனது மூன்றரை வயது பச்சிளம் குழந்தையுடன் படுத்து உறங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் 20 வயது இளைஞர் ஒருவன் தாயுடன் உறங்கி கொண்டிருந்த பிஞ்சு குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் தான் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் தாயின் அருகில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று பாலத்திற்கு மறுபுறம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

காலையில் பாலத்திற்கு மறுபுறம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதை அடுத்து ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த பச்சிளம் குழந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து குழந்தையின் பெற்றோர் கதறி துடித்துள்ளனர்.

அதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மும்பையில் உள்ள ஜே. ஜே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement