இந்தியா

82 வயது மூதாட்டியை சராமரியாக தாக்கிய மருமகள்.. மனதை உருக்கும் வீடியோ பதிவு.!

Summary:

india/haryana-woman-arrested-for-beating-old-mother-in-law-viral-video

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்த 82 வயதான மூதாட்டியை அவரது மருமகள் மற்றும் அவரின் தாய் இருவரும் சேர்ந்து சராமரியாக தாக்கிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியின் பேரன் வீடியோ எடுப்பதை அவதனியாத மருமகள் தனது 82 வயது மாமியாரை குப்பை அள்ளும் தட்டாமல் தாக்கியுள்ளார். மேலும் வீட்டு வேலைகளை செய்யும்படி தனது வயதான மாமியாரிடம் மிகவும் கடுமையாக அவர் கட்டாயப்படுத்தவும் செய்கிறார்.

அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியான மூதாட்டியின் மகன், மனைவி மற்றும் அவரின் தாய் மீதும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதனையடுத்து போலீசார் அவர்கள் இரண்டு பேர் மீதும், வயதான பெண்ணை காயப்படுத்தியதற்கும், குற்றவியல் மிரட்டல் விடுத்ததன் பெயரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement