கேரளா வெள்ளநிவாரணம், வெளிநாட்டு நிதிகளை ஏற்க இந்தியா அதிரடி மறுப்பு! என்ன காரணம் தெரியுமா?

கேரளா வெள்ளநிவாரணம், வெளிநாட்டு நிதிகளை ஏற்க இந்தியா அதிரடி மறுப்பு! என்ன காரணம் தெரியுமா?



India say no to foreign fund for kerala flood relief

கேரளா மாநிலத்தில் கடந்த நூறு வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் அனைவரும் தங்க இடம் இல்லாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். உன்ன உணவில்லாமல், தங்களது உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

kerala flood

உலகின் பல மூலைகளில் இருந்து கேரளாவிற்கு நிவாரணங்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இனியேல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியாவின் கொள்கை முடிவு என இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவுக்கு நிதியுதவி செய்ய போவதாக கடந்த 18-ஆம் தேதி அன்று தாய்லாந்து அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையில் அந்த நிதியுதவியை வாங்க இந்தியா மறுத்துள்ளதாக தாய்லாந்துக்கான இந்திய தூதர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.