உச்சக்கட்ட அதிர்ச்சி! இந்தியாவில் 2025 இல் சாலை விபத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை! மத்திய அரசு வெளியிட்ட பகீர் அறிக்கை.....!!!



india-road-accident-deaths-rise-2025

இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலின்படி, 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சாலை விபத்துகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,83,382 ஆக உயர்ந்துள்ளது.

2025-ல் உயிரிழப்புகள் அதிகரிப்பு

காங்கிரஸ் எம்பி பென்னி பெஹனான் எழுப்பிய கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2024-ஆம் ஆண்டில் பதிவான 1,77,175 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும்போது, 2025-ல் இது 3.5 சதவீதம் அதிகரித்து 1,83,382 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் 5.3 சதவீதம் உயர்ந்து 5,13,563 ஆக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! தெலுங்கானா மாநில அரசு பேருந்து விபத்தில் பலி எண்ணிக்க 24 ஆக உயர்வு! சாலையில் சிதறி கிடக்கும் உடல்கள்....!!

பத்தாண்டுகளில் 25.5% உயர்வு

2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளால் 1,46,133 பேர் உயிரிழந்திருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த பத்தாண்டுகளில் உயிரிழப்புகள் 25.5 சதவீதம் அதிகரித்திருப்பது சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக நிலைமை

மாநில அளவிலான தரவுகளில், உத்தர பிரதேசத்தில் உயிரிழப்புகள் 24,118-லிருந்து 27,550 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பீகார், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் சாலை விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், பஞ்சாப்பில் உயிரிழப்புகள் 4,759-லிருந்து 3,062 ஆகக் குறைந்துள்ளன. சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா மற்றும் டெல்லியிலும் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: தமிழக சட்டமன்ற தேர்தலில் எகிறிய வாக்கு சதவீதம்! மாலை 5 மணி நிலவரப்படியே.... வரலாறு படைத்த சாதனை...!!!